• Breaking News

    நம்பியூர் அருகே உள்ள கெடாரை துறையன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் இந்து அறநிலையத்துறையினர் அளவீடு

     


    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெடாரையில் துறையன் திருக்கோயில் அமைந்துள்ளது.

    இத்திருகோயில் ஒரு சமூகத்தின் குலதெய்மாக விளங்கிவருகிறது. சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயிலில் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    இக்கோயிலானது இந்துசமய அறநிலையத்துறையின்கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இந்து சமயஅறநிலையத்துறையின் சார்பில் ஒரு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோயிலுக்கு சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளதாம்,அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் கோயிலுக்குச் சார்ந்த சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும், ஆனால் துறை ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்றும் அதைத்தொடர்ந்து அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் ஈரோடு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் கொண்ட குழு திருக்கோயிலை மீட்டு தர கோரி தமிழ்நாடு முதலமைச்சர்,மாவட்ட ஆட்சித் தலைவர்,இந்துசமய அறநிலையத்துறை,வருவாய் வட்டாட்சியர் போன்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக ஈரோடு மாவட்ட நில அளவீட்டாளர்கள் துறையன் கோயிலுக்கு சென்று கோயிலுக்கு சொந்தமான நிலங்களை முழு அளவீடு செய்தனர்.

    மேலும் நில அளவீட்டாளர் கூறுகையில் இந்துசமய  அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் அளவீடுகளை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் ஈரோடு மாவட்ட செயலாளர் சிவக்குமார் கூறுகையில் துறையன் கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டுத் தரக்கோரி தமிழ்நாடு அரசு மற்றும் வருவாய்த்துறை இந்து சமயஅறநிலையத்துறை சார்பாக நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்து நிலங்களை மீட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர் என தெரிவித்தார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments