பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி சத்தி ஒன்றியம் பாக முகவர்கள் ( BLA -2 ) ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் கே. ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கே.கே.சேகர் , வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் என்.சுப்பிரமணியம் , எ.ரத்தினம்மாள், கே.பெரியசாமி , ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் டி.கே.ரமேஷ்குமார் , எஸ்.ஆறுசாமி , சி.ஆர்.செல்வராஜ் , சத்தியமங்கலம் ஒன்றிய ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.சுப்புலட்சுமி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் சிறப்புரையாற்றினார். உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கா.கி.ராஜேந்திரன் , மாவட்ட கழக துணை செயலாளர் கீதாநடராஜன் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பா.அருண்குமார் BLA-2 முகவர்கள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments