• Breaking News

    மேல்மங்கலம் கிராமத்தில் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் விசாரணை


     தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தில் நள்ளிரவில் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம். காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை.சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரை கைது செய்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் கிராமத்தில் உள்ள வெற்றிவேல்  என்பவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து வெற்றிவேல் என்பவர் வடுகப்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த இளைஞர்களிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டாட்டா மேஜிக் வாகனத்தில் நள்ளிரவில் மேல்மங்களம் கிராமத்திற்கு வந்து ஊரில் இருந்தவர்களை அரிவால் மற்றும் கத்தியால் ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டி தாக்குதலில் ஈடுபட்டு வந்த டாட்டா மேஜிக் வாகனத்தில் தப்பி  ஓடினர்.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜெகதீஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,  முத்துக்குமார் என்ற இளைஞர் விரல் துண்டானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

     இது தொடர்பாக எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தாக்குதல் நடத்தியவர்களும், தாக்குதலில் பலத்த காயம் அடைந்தவர்களும், வெவ்வேறு சமூகம் என்பதால் பதட்டமான சூழ்நிலை வருவதால் மேல் மங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனத்தில் வந்து அரிவாள் மற்றும் கத்தியுடன் விரட்டி விரட்டி வெட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன,இது தொட‌ர்பாக மாவட்ட SP பிரவீன்உமேஸ் டோங்கரே,உத்தரவின் பேரில்,DSP,கீதா ,ஜெயமங்கலம் இன்ஸ்பெக்டர்கள், சங்கர் மீனாட்சி,தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு 7 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    No comments