• Breaking News

    நாகை அருகே வடுகச்சேரி ஊராட்சியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமில் 500 மேற்பட்டோர் பயனடைந்தனர்


    நாகை மாவட்டம் வடுகச்சேரி ஊராட்சியில் நாகப்பட்டினம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி இளையராஜா தலைமை வகித்தாா். முகாமிற்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி நாகை மாலி, விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி முதல்வர் குணசேகரன், நாகை ஹோலி டவுன் ரோட்டரி சங்க தலைவர் கணேசன், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றி முகாமினை துவங்கி வைத்தார். முகாமில்  இலவச கண் சிகிச்சை பரிசோதனை, பொது மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, சித்த மருத்துவம், கா்ப்பிணிகளுக்கான ஸ்கேனிங் பரிசோதனை, பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை, எலும்பு சிகிச்சை மருத்துவம்,  சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் ரோட்டரி மொபைல் ஹாஸ்பிடல் மூலம் இசிசி பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

     இதில் வடுகச்சேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பரிசோதனை செய்து கொண்டனர்.  மருத்துவரின் பரிசோதனைக்குப் பின்னர் அவர்களுக்கு மேல்முறையீடு சிகிச்சை  தேவைப்பட்டால் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு  அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

    No comments