• Breaking News

    'மிஸ் இந்தியா 2023' மகுடம் யாருக்கு?

     


    ஒவ்வொரு ஆண்டும் 'மிஸ் இந்தியா' அழகி போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் 71ஆவது மிஸ் இந்திய அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று மணிப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா முதலிடம் பிடித்து மிஸ் 'இந்தியா-2023' மகுடத்தைச் சூடினார். மேலும், டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா இரண்டாமிடமும், மணிப்பூரை சேர்ந்த தோனோ ஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாமிடமும் பிடித்தனர். பட்டத்தை வென்றுள்ள நந்தினி குப்தா, 10 வயதிலிருந்து மாடலிங் துறையில் இருந்துவருகிறார். மிஸ் இந்திய பட்டத்தை வென்ற நந்தினிக்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    No comments