• Breaking News

    ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு....

     



    அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளடக்கிய 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் எனவும், 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அதிமுகவில் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு செயற்குழு முழு அதிகாரம் வழங்கியது. மேலும், இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    No comments