• Breaking News

    அறந்தாங்கி அருகே நாகுடியில் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது

    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகே நாகுடியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பகுஜன் சமாஜ் கட்சி ‌மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.பிராபகரன் ஏற்ப்பாடு செய்தனர்.

     இதில் அறந்தாங்கி திமுக ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தப்பா,தமிழக சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் சரவணமுத்து,ஆதி தமிழர் சேனை மாநில செயலாளர் ராஜவடிவேல், மேல்மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா இரவிச்சந்திரன், வழக்கறிஞர் கார்த்திகேயன்,

     திருமலை ரியல் எஸ்டேட் அருள் ( எ) சுந்தர்ராஜன்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி தண்டாயுதபாணி, அதிமுக நாராயணன் ,அமரசிமேந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், ஒன்றிய திமுக இளைஞர் அணி செயளாலர் P.S.செந்தில், சமூக ஆர்வலர் நாகுடி கார்த்திகேயன் ,

    முன்னால் நாகுடி ஊராட்சி மன்ற துணை தலைவர் சேட்முகமது , நீர் பாசன மேலாண்மை தலைவர் ரமேஷ், அரசர்குளம் தவச்செல்வன், கவியரசரன் நாகுடி பழனிச்சாமி ,தவசிமணி ஆகியேர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அம்பேத்கர் நினைவாக மரக்கன்று மற்றும் உணவு வழங்கினார்.

    No comments