• Breaking News

    நாகை அருகே ஆதமங்கலத்தில் தெரு நாய்கள் கடித்து 11 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு


    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொடியாளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய வயல்களின  உரத் தேவைக்காக ஆதமங்கலத்தில் வயல் பகுதிகளில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு விட்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடிரென பட்டிக்குள் புகுந்த 3 தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடு மற்றும் குட்டிகளை கடித்து குதறியுள்ளது. இதில் 11 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்த்து. மேலும் 10 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். வயலில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் 11 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆதமங்கலம், கொடியாளத்தூர் ஊராட்சிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments