கருல்வாடிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் அவசர காலத் தேவைக்காக மேலும் ஒரு 108 ஆம்புலன்ஸ் அத்தாணி கருல்வாடிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம் எல் ஏ., துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.சக்திகிருஷ்ணன் , மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , 108 பணியாளர்கள் , திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், எம்.எஸ்.சண்முகசுந்தரம் , ஏ.எம்.எஸ்.மணி தொமுச மத்திய சங்க பொருளாளர் ரங்கநாதன்,சிறுபான்மை இன மாவட்ட துணை அமைப்பாளர் செபஸ்தியான் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜ் , அத்தாணி பேரூர் கழக செயலாளர் ஏ.ஜி.எஸ்.செந்தில் கணேஷ் , அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் நாகேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வையாபுரி , அத்தாணி பேரூராட்சி துணைத் தலைவர் லோகநாதன் , அத்தாணி பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் அங்கமுத்து , விவசாய அணி துணை அமைப்பாளர் பாலு , முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் கே.கே.சுப்பிரமணியம் , மாணிக்கம் , ராமசாமி , பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments