திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு T.N.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஈரோடுமாவட்டம் ,T.N.பாளையம் ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு T.N.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் T.N.பாளையம் அண்ணா சிலை மற்றும் பெரிய கொடிவேரி பேரூராட்சி ஆகிய இடங்களில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களால் கழக கொடி ஏற்றியும், பெரிய கொடிவேரி பேரூராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இருதய பரிசோதனை முகாமையும் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து 20 சாலை ஓர சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிழல் குடை வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கேசுப்ரமணியம், கே.ஆர்.கந்தசாமி , மாவட்ட கழக அவைத் தலைவர் A.பெருமாள்சாமி, மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் நவமணிகந்தசாமி, மாவட்ட கழக பொருளாளர் K.K.சண்முகம் (எ) ஜம்பு, T.N.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, வாணிபுத்தூர் பேரூராட்சி தலைவர் டி.எம்.சிவராஜ் , காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி வெற்றி வேல் , வாணிபுத்தூர் பேரூர் கழக செயலாளர் சேகர் ( எ ) கே.பழனிசாமி , பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் ஏ.ஆறுமுகம் , காசிபாளையம் பேரூர் கழக செயலாளர் எம்.எம்.பழனிசாமி , ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments