பழைய வலம் அகதீஸ்வரர் சுவாமி மற்றும் கரியமாணிக்க பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா


திருவாரூர் மாவட்டம் பழைய வலம் கிராமத்தில் ஸ்ரீ சத்யாயதாட்சி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் மற்றும் கரியமாணிக்க பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இதில் பழமையான அகஸ்தீஸ்வரர் சுவாமி சிவாலயம் சிதிலமுற்று வழிபாட்டிற்கு பயன்படாமல் இருந்துள்ளது.இதனை முழுவதும் கருங்கல் திருப்பணியாக கற்ப கிரகம் அர்த்தமண்டபம் மகா மண்டபம் அலங்காரம் மண்டபம் பரிவார சன்னதிகள் முகப்புவாயில் மதில் சுவர் என அனைத்தும் கிராம மக்களால் பழுது பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் முடிந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.அதைத் தொடர்ந்து சாந்தி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடைபெற்று கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மற்றும் தீபாரதணை நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி மூன்றாம் கால யாக பூஜை  நடைபெற்றது.நேற்றைய தினம் நான்காம் யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து  இன்று காலை 6 ஆம் கால யாக பூஜை துவங்கி மஹா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கட புறப்பாடு நடைபெற்றது.புனித கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர்.முன்னதாக ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரர் சிவாலய விமானத்தில் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

மேலும் கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் சுற்றி இருந்த திரளான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்துகலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அடுத்தடுத்து நடைபெற்ற சிவ வைணவ தளங்களின் குடமுழுக்கு விழாவில் பழையவலம் பள்ளிவாரமங்களம் கேக்கரை பிலாவடி மூலை திருவாரூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments