• Breaking News

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு தானியங்களை வழங்க வேண்டும்.... இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் செந்தில் நாகையில் பேட்டி....


    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்ய வருகை தந்த  இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது ராகுல் காந்தி எம்பி பதவி பறிபோனது போல் இந்து கோயில்களை அவமானப்படுத்தும் வகையிலும் சிலைகள் மற்றும் இந்து கோவில்கள் இடிக்கப்பட வேண்டும்  உள்ளிட்ட மத,ஜாதி மோதல்களை உருவாக்கும்  திருமாவளவன் மீது வழக்குத் தொடர்ந்து அவரது எம்பி பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ரம்ஜான் நோம்பு காலங்களில் பள்ளிவாசல் மசூதிகளுக்கு அரிசி வழங்குவது போல் ,ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு தானிய பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும்,தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது போல் ஏழை எளியோருக்கு பட்டாக்களை வழங்க வேண்டும், மேலும் வேளாங்கண்ணியில் உள்ள  விடுதிகளில் கலாச்சாரத்தை சீரழிக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் முறையற்று இங்கு தங்குவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் முறையாக விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    No comments