வடுகபட்டி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் சாக்கடை வசதி,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம். எஸ். எம். அழகர் என்கிற சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். வடுகபட்டி பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தீர்மான நகல்களை வாசித்தனர். இந்த கூட்டத்தில் வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து 9க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் வடுகபட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாக்கடை வசதி, வடிகால் வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கூட்டத்தில் வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments