• Breaking News

    பா.ஜ.க.வுக்கு எதிராக வரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் என நம்பிக்கை உள்ளது: அகிலேஷ் யாதவ்

     

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "எதிர்க்கட்சிகளுக்கான கூட்டணி அல்லது முன்னணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2024-ல் பா.ஜ.க.வை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்வரும் நாட்களில், பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் என நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க.வுடன் ஒப்பிடும்போது பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இல்லை. ஆனால் பிராந்தியக் கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக தீவிரமாக போராடுகின்றன. அவை வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    No comments