• Breaking News

    விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கத்தை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    தேர்தல் பிரச்சாரத்தின் போது  ராகுல் காந்தி அவர்கள் ஒரு பிரிவினரை திருடர்கள் என தரக்குறைவாக பேசியதாக கூறி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கு விசாரணையில் ராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ராகுல் காந்தி அவருடைய எம்பி பதவியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தை ஈடுபட்டு வரும் நிலையில் இன்று விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர்கள்  மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு பொய் வழக்கு போட்டதன் காரணமாகவே ராகுல் காந்தி அவர்களின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    No comments