தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம்
தேனியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனர்.எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸார் உண்ணாவிரதம்இருந்தனர்.பிரத மர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2ஆண்டு தண்டனை விதித்தது. இதனால் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
No comments