• Breaking News

    பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு


    தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு  பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அம்பாசங்கர் தலைமையில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் வழக்கறிஞர் ஒருவர் முன் விரோதம் காரணமாக சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் .வழக்கறிஞரை கொடூரமாக கொலை செய்த கொலைகார கும்பலை குண்டர்  தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ,தமிழகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது போல் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி நீதிமன்ற பணிகளில் புறக்கணிப்பில் ஈடுபட்டு   வழக்கறிஞர்கள் கருப்பு பேஜ் அணிந்து  பல்வேறு  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசுப்பிரமணி ,இணைச் செயலாளர் முத்தமிழ் அரசன் ,பொருளாளர் மகாராஜன் ,மற்றும்  மூத்த வழக்கறிஞர்கள் நாராயணசாமி ,சுந்தரராஜன் ,தாமரைச்செல்வன் ,சிவசுப்பிரமணியன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் .முன்னதாக பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தென்கரை காவல் நிலைய  காவல் ஆய்வாளர்  ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    No comments