பெரியகுளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇஅதிமுக சார்பில் -ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு அதிமுகவினர் இடையே மிகுந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை நடத்த தடையில்லை என நீதிமன்ற அளித்த தீர்ப்பால் பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் தவிர யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தேர்தல் நடத்தும் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமன் நத்தம் விசுவநாதன் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். வழக்கறிஞர் ஜெயராமன்,மாவட்ட எம்ஜி ஆர் அணி இணைச் செயலாளர் தவமணி, ஜெயசீலன், வெங்கடேஷ், இலக்கியன், ராம்ஜி, ரஞ்சித்ராவ், சுரேஷ், பழனிச்சாமி , சென்றாயன், துரைப்பாண்டி, ராஜாங்கம்,மற்றும் மகளிர் அணி முருகேஸ்வரி ,அமுதா, சுமதி மற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர்.
No comments