• Breaking News

    அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் உயர் நீதிமன்றம் அதிரடி - எட்டையாபுரம் நகர செயலாளர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்


    ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு அதிமுகவினர் இடையே மிகுந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை நடத்த தடையில்லை என நீதிமன்ற அளித்த தீர்ப்பால் பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் தவிர யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தேர்தல் நடத்தும் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமன் நத்தம் விசுவநாதன் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து  இதனை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில்  பேருந்து நிலையம்  பகுதிகளில்  அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    No comments