• Breaking News

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய பிஜேபி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் ஈரோடு மூலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசு அரசு பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி பங்குகளையும் ,  எஸ்பிஐ வங்கியின் பங்குகளையும் அதானி குடும்பத்திற்கு விற்றதை கண்டித்தும் மேலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டும் அந்த துறைகளின் பங்குகளை அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வித்துக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு மக்கள் விரோத போக்கு அரசு இந்த அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் முருகேஷ் கதிர்வேல் ரவி ஈஸ்வரமூர்த்தி ராவத் குமார் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் வி எம் கிருஷ்ணமூர்த்தி சீதாபதி பழனிவேல் வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வேலுச்சாமி சுந்தரம் பாலாஜி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் எஸ்சி , எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் மாவட்ட பொதுச் செயலாளர் காளிதாஸ் வாசுதேவன் விஜய் கிருஷ்ணா மணி  பெரியசாமி புல்லட் மணி ஹலாதத் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments