• Breaking News

    பெரியகுளத்தில் ஓபிஎஸ்,சசிகலா,தினகரன் ஆகியோர் படத்துடன் பேனர்

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,ஓபிஎஸ்,சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் படத்துடன் ஒற்றுமையை வலிமை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,கழகத் தொண்டர்களே வாருங்கள் ஒன்று இணைவோம் என்று வாசகங்கள் பொரித்த விளம்பர பதாகைகள்வைக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாய்ப்பு இருந்தால் சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறிய நிலையில் பெரியகுளத்தில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளதால் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    No comments