தேனி மாவட்டத்தில் ரோந்து வாகனங்கள் துவக்கி வைப்பு
தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வண்ணம் 12 கூடுதல் இரு சக்கர ரோந்து வாகனங்களை தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் அவர்கள் ரோந்து காவலர்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.
இதற்காக பொதுமக்கள் தங்களுடைய புகாரை தெரிவிக்க..செல்போன் எண் Hello Police-8870985100,கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் - 100,மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04546 - 250100. மேலும் அந்தந்த காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்து தங்களது பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு பயன்பெறலாம்என தேனி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments