மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேமுதிக மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்சிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் பார்வையிட்டனர்


திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மஞ்சாகுடோனில் வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்கு இயந்திரத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் இ.ஆ‌.ப. முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள்  முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில் திருப்பத்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்டச் செயலாளர்  M.K.ஹரிகிருஷ்ணன்  பரிந்துரை பேரில் மாவட்ட துணைச் செயலாளர் சி.எஸ்.சரவணன், நகர செயலாளர் மதன்ராஜ் ,திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் R.பெருமாள், கந்தலி தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் P.மாது,  முருகன், பங்கேற்றனர் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்மஞ்சாகுடோனில்  உள்ள அலுவலக வளாகத்தில்  மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில்  அரசு துறை அதிகாரிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments