கோவில் திருவிழா நடத்த இடையூறு செய்து திமுக பிரமுகர் அட்டூழியம்.... நடவடிக்கை எடுக்க வேண்டி பொது மக்கள் புகார்....
விருதுநகர் அருகே உள்ளது சூலக்கரை. இங்குள்ள தெற்கு தெருவில் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் போது பெண்கள் முளைப்பாரியிட்டு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்,
இந்த ஆண்டும் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி பயிர் செய்திருந்தனர். ஆனால் அதே கிராமத்தை சேர்ந்த திமுகவை சேர்ந்தவர் கருப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், முளைப்பாரி பயிர் செய்திருந்த கலையங்களை சேதப்படுத்தியும், கோவிலை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அராஜகம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திமுக பிரமுகர் கருப்பையாவிடம் அப்பகுதி பெண்கள் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியும், கோவில் சாவியை ஒப்படைக்க முடியாது என்றும் அமைச்சரின் பெயரைச் சொல்லி அராஜகத்திலும் ஈடுபட்டு வருவதாக கூறி திருவிழா நடத்த இடையூறாக இருப்பதாக அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவை வழக்கம்போல் நடத்த ஏற்பாடு செய்து தர வேண்டும், திமுக பிரமுகர் கருப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
No comments