ராகுல் காந்திக்கு ஆதரவாக திருவாரூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


ராகுல் காந்திக்கு ஆதரவாக திருவாரூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ருசிகரம்.ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து 25 பெண்களுடன் ஆர்ப்பாட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக நகர மகளிர் அணி தலைவி.

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதித்திருப்பதை கண்டித்தும் பாராளுமன்றத்தில் எம்.பி பதவியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் வாயில் துணியை கட்டிக் கொண்டு நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு வாயில் துணியை கட்டிக் கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து மன்னார்குடி நகர பாஜக தலைவியாக இருந்த வசந்தி என்பவர் 25 பெண்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உறுப்பினர் மன்னை மதியழகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதில் பேசிய வசந்தி ,ராகுல் காந்திக் கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை.இதற்காக இவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டியதில்லை எனவே இதை கண்டித்து நான் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் மேலும் அவரின் விடுதலைக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என்று பேசினார்.

Post a Comment

0 Comments