• Breaking News

    கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


    நாகை மாவட்டம் கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சியில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர்,  செயல் அலுவலர் குகன் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து  பேரூராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு அஞ்சு வட்டத்தம்மன் ஆலயத்தில் பங்குனி பெருவிழா வரும் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கியதால் தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் அனைத்து வார்டுகளுக்கும் தடையின்றி தண்ணீர் வழங்க ஆலோசிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பேரூராட்சி உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப விரைவில் சரி செய்து தரப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் உறுதி அளித்தார்.  கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    No comments