• Breaking News

    அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக முழக்கம்


    எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தேவூர் கடைத் தெருவில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெண்மணி குமார் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க , நிரந்தர பொதுச் செயலாளர் வாழ்க என வாழ்த்தி    உற்சாகம் முழக்கமிட்டனர். நிகழ்வில்  மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கே.என்.ராஜேந்திரன், ஒன்றிய பொருளார் எம்.அசோகன்,  மாவட்ட பிரதிநிதி ஜி. தியாகராஜன், மாவட்ட அம்மா பேரவை து. செயலாளர், கே. மணிவண்ணன் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சுமதி ஜெயப்பிரகாஷ், ஒன்றிய மாணவரணி ஆர் பழனிச்சாமி, ஒன்றிய அண்ணா தொழிற் சங்க செயலாளர் அங்காடி ஜெயராமன் மற்றும் ஊராட்சி கழக , கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

    No comments