• Breaking News

    தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்


    தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் ரபீக்,மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல்,செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் எதிரில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்றும்,விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பின்படி அனைத்து முகாம்களிலும் கட்சி கொடி ஏற்றி டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை உறுதிமொழி ஏற்க வேண்டும் எனவும்,பெரியகுளம் அம்பேத்கர் நகரிலிருந்து அம்பேத்கர் சிலை வரை ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்துவது எனவும்,பெரியகுளத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை சுற்றி புதிதாக ஏன் இப்படி அமைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து பணியை செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றி தெரிவிப்பதோடு,பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி ஜெயமங்கலம் மேல்மங்கலம் வழியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும்,இது சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பெரியகுளம் சரத்துப்பட்டி ஊராட்சிக்கு சமுதாய கூடமும் பயணியர் நிழற்குடையும் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நிதியும் ஒதுக்கப்பட்டு அந்த நிதி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வருத்தம் அளிப்பதாகவும்,வரும் 2023-2024நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து சரத்துப்பட்டி ஊராட்சியில் சமுதாய கூடமும் பயணியர் நிழற்குடையும் அமைத்து தர வேண்டும் எனவும்,பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மூன்றாவது வார்டு பகுதியில் 8 லட்சம் செலவில் ஊராட்சி சார்பில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த தொட்டி பழுதாகி தண்ணீர் வீணாக செல்வதாகவும் உடனடியாக புதிதாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன்,மாநிலத் துணைச் செயலாளர்கள் தமிழன்,கோமதி ஆனந்தராஜ்,இளமதி,சிவனேசன்,நிர்வாகிகள் ஜோதிமுருகன், ராஜதுரை,கருத்தையன்,சேகுவேரா,பெரியசாமி,வீர தெய்வம்,வீரபிச்சை,குழந்தை ராஜ்,இனியன்,கைலாசம்,காளிதாஸ், செல்வராஜ், பாண்டியன்,தாமரை செல்லையா, விஜயகுமார், தர்மா, நாகேந்திரன், சேகர், காடுவெட்டி கருப்பு, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தேனி நகர செயலாளர் ஈஸ்வரன்நன்றி கூறினார்.

    No comments