நாகை அருகே இருக்கை ஊராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை ஊராட்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கடைத் தெரு சாலை, தெற்கு தெரு சாலை, வடக்கு தெரு, பள்ளிக்கூட சாலை உள்ளிட்ட சாலைகள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடமாடத முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைத்து தரக்கோரி கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கிராம மக்கள் சம்பந்தபட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஊராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடிப்பட்டவர்களிடம் கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜகோபால் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதில் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
No comments