தேனியில் வனத்துறை கட்டிட பணியின்போது மேற்கூரை இடிந்து ஒருவர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பக தேனி துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது எதிர்பார விதமாக கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்டிகோ காங்கிரிட் ஆர்ட் சரிந்ததில் பெரியகுளம் பங்களா பட்டியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக் ஆகிய இரண்டு கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக தேனி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் இடத்தில் இதுவரையும் மிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து என்பவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இருடன் பணியாற்றி வந்த அசோக் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெறப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துகாவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments