தூய்மை பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு கேட்டு நகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி துப்புரவு ஒப்பந்த பணியாளரான கண்ணன் தூய்மை பணி செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மன்னார்குடி பிருந்தா நகர் செல்வானந்தம் நகர் பகுதியை சேர்ந்த கலையரசன் மற்றும்  சிவா இருவரும் துப்புரவு பணியாளர் கண்ணனை மது போதையில் தாக்கியுள்ளர் இது குறித்து தகவலறிந்த மன்னார்குடி போலீசார் துப்புரவு பணியாளரை தாக்கிய இருவரையும் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் துப்புரவு பணியாளரை தாக்கிய நபர்களை கண்டித்தும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் துப்புரவு பணியாளர்கள் ஏராளமான பங்கேற்று கண்டனர் கோஷங்களை எழுப்பினர்..

Post a Comment

0 Comments