அஇஅதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி சத்தியில் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்கள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அஇஅதிமுக சார்பில் சத்தி நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவர் ஓ.எம்.சுப்ரமணியம் தலைமையில் சத்தியமங்கலம் தெற்கு , வடக்கு ஒன்றிய செயலாளர்கள் என்.என்.சிவராஜ், சி.என்.மாரப்பன், பேரூராட்சி செயலாளர் நடராஜ், மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் , மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி , மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ் செல்வி , கொமரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்,கவுன்சிலர்கள், மாவட்ட, நகர கழக கிளை செயலாளர் ஒன்றாக சேர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் , மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர , ஒன்றிய , பேரூர் கழக உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments