கோடிக்கரை கடற்கரையில் வனத்துறை சார்பில் தூய்மை பணி நடைபெற்றது
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரையில் வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் 'வனத்துறையினர், வனக்குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட தூய்மை பணியை கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கோடிக்கரை ஆதி சேது கடற்கரையில் புனித நீராட வந்தவர்களால் விடப்பட்ட பழைய ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி கடற்கரையை தூய்மைப்படுத்தினர். ஆதிசேது கடற்கரை மற்றும் புதிய கலங்கரை விளக்க பகுதி மற்றும் சோழர்கால கலங்கரை விளக்க கடற்கரை பகுதி என தூய்மை பணியில் ஈடுபட்டனர் இரண்டு டன் கழிவு பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் வனவர்கள் பெரியசாமி சதீஷ் ராமதாஸ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வனக்குழுவினர் பங்கேற்றனர்.
No comments