கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் திடீர் மழையால் கும்பக்கரை அருவியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு.... சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்....
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் அமைந்துள்ளது தான் கும்பக்கரை அருவி இந்த அருவியானது முழுவதுமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கும்பக்கரை அருவியில் தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர் இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீர் வரத்து சீரானதால் மீண்டும் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே போல இரண்டாவது முறையாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டன இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில் திடீர் மழை பெய்து வருவதை கொடைக்கானல் வனச்சரக அதிகாரிகள் தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 2 மணி முதல் கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை அருவிப்பகுதியில் இருந்து வெளியேற்ற துவங்கினர் இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கான மாலை 4 மணி வரையிலான அனுமதி நேரம் முடிவடைந்து நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து கும்பக்கரை அருவியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் அறிவிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அருவிப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பதற்கும் அருவியில் குளிப்பதற்கும் தடைவிதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார் மீண்டும் வெள்ளை வரத்து சீரானதும் நாளை அல்லது மறுநாள் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க உள்ளதாக வனச்சரகர் டேவிட் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் மழை பெய்வதால் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments