• Breaking News

    வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு யாத்திரை


    ஈரோடு மாவட்டம் , தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராக வீறு கொண்டு போராடிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு வரலாற்று விழாவின் வாகன பேரணி இன்று  நடைபெற்றது. இந்த  வாகன பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி ,தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி  ஆகியோர்  கொடியசைத்து  துவக்கி வைத்தார்கள்.

    கேரளாவைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்களான இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ. வி. டி .பல்ராம், சி .சந்திரன், வழக்கறிஞர் பி. ஏ. சலீம் ஆகியோருடன் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின் எழுச்சி பயணமாக கேரளம் சென்றது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments