பெரியகுளம் கல் குவாரிகளில் மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகள் அனைத்தும் நிலப் பகுதியின் கீழ் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி பெற்று கல் குவாரிகள் இயங்கி வருகிறது.கல் குவாரிகள் இயங்கும் பகுதியில் குடியிருப்புகள் உள்ளதா? குவாரிகள் இயங்குவதற்கு குவாரியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளதா? அனுமதி பெற்ற இடங்களில் கல் குவாரிகள் இயங்கி வருகிறதா? அனுமதி பெற்ற அளவிற்கு மேல் கல்வெட்டி எடுக்கப்படுகிறதா? கல் குவாரிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையான வருகை பதிவேடுகள் பயன்படுத்துகிறார்களா? வேலை பார்க்கும் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா? மேலும் வெடி மருந்துகள் பயன்படுத்துவது அவற்றை கையாளும் முறைகள் குறித்து குவாரி உரிமையாளர்களிடம் இருக்கும் ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா சோதனை மேற்கொண்டார்.
இந்த சோதனையின் போது தேனி மாவட்ட கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.மேலும் குவாரிகளில் இருந்துவரும் கனரக வாகனங்கள் வைகை அணை சாலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதிவேகமாக செல்வதாலும்,கல் மற்றும் மண் ஆகியவற்றை மூடாமல் செல்வதால் சாலையில் கொட்டி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும்,இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் பயணிப்பதாகவும்,இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments