• Breaking News

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையில் மாட்டு கொட்டாயில் தீ விபத்தால் ஏழு ஆடுகள் மற்றும் மாட்டு வண்டி எரிந்து சேதம்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  சதுமுகை ஊராட்சி ,  ஆலத்து கோம்பையில் கிட்டான் ராஜம்மாள் த/பெ. கருப்பு அவர்களது  மாட்டு கொட்டாயில் தீ விபத்து ஏற்பட்டு வண்டி சாலையில் இருந்த ஏழு ஆடுகள்  மற்றும் மாட்டு வண்டி  எரிந்து சேதமடைந்ததை  சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ  பார்வையிட்டார். உடன் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்  பற்குணன் ,  ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆறுச்சாமி , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, மூர்த்தி  ஆலத்துக்கோம்பையை சேர்ந்த  சுப்பு ரவி, வெங்கடேஸ்வர மூர்த்தி , கோணமூலை  ஊராட்சி தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் ,  சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் ,  ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார் , அரியப்பம்பாளையம் டாக்டர் அ.க.சற்குணன் ,  திமுக நிர்வாகிகள் ,  ஊர் பொதுமக்களும் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments