வேளாங்கண்ணியில் ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றாவாளி என குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்பி பதவியை மக்களவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாவட்டத்தலைவர் அமிர்தராஜா தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் இரவு நேரத்தில் கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காங்கிரஸ் கட்சி எஸ்சி துறை சார்பில் நடைப்பெற்ற தீப்பந்த கண்டன போராட்டத்தில் ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்தை கண்டித்தும், பிஜேபி மோடி அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் திமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
No comments