அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஒ.பன்னீர் செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் அதிமுக அலுவலகம் எதிரே தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆர்.காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற தொண்டர்களின், கட்சி நிர்வாகிகளின் விருப்பம் நிறைவேறும் வகையில் அது தீர்ப்பாக வந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகி யுள்ள அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமைத் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு முன்னோட்டம் ஆகும். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஓ.பி.எஸ் டம் தொண்டர்களும் இல்லை நிருவாகிகளும் இல்லை. எது உண்மையோ, எது சரியோ அதுதான் எல்லா காலங்களிலும் வெற்றி பெறும் அதிமுகவை எதிர்த்து யார் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
0 Comments