• Breaking News

    திருச்சி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாப பலி

     


    திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments