நம்பியூர் அருகே உள்ள அரசன் குட்டைபுதூரில் ரூ.60 லட்சம் செலவில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை நெல் சோதனை ஓட்ட மைய திறப்பு விழா
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சிக்குட்பட்ட அரசன்குட்டை புதூரில் ரூ 60 லட்சம் செலவில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை நெல் சோதனை ஓட்ட மைய திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேலாண்மை உதவி அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.
கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன், அபிநயா விதை சான்று அலுவலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னச்சாமி விதை நெல் மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நம்பியூர், டி.என் பாளையம், கோபி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பயன்படும் வகையில் நெல்களை தரம் பிரித்துதரமான விதை நெல் உற்பத்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.கூட்டு பண்ணையம் அடிப்படையில் உள்ள இந்த விதை நெல் மையத்தின் மூலம் சுமார் இப்போது ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் மேலும் விவசாயிகள் இதில் இணைந்து பயன்பெறலாம்,கூட்டுப்பாளையம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது ஒரு பருவத்தில் ஒரு பெயரை கூட்டாக சாகுபடி செய்தல் இடு பொருட்களை கூட்டாக கொள்முதல் செய்தல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் தரமான விலை பொருட்களை உற்பத்தி செய்து மதிப்புக்கு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க திட்டம் பயன்படுகிறது எனக் கூறினார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments