விருதுநகரில் பணியிடத்தில் மரணமடைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்தில் மரணமடைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்ச ரூபாய் நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்தில் மரணமடைந்த விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது உதவித்தொகை பெற குடும்பத்தினருடன் வந்திருந்த சிறார்களுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
No comments