• Breaking News

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.... நாகையில் அரசு ஊழியர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்....


    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 4,ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாகை ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அங்கு வெறிச்சோடியதுடன் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனிடையே நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நூற்றுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில், ஒப்படைப்பு விடுப்பு, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலியாக உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.இதைப்போல் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலம் வரை ஊதியத்தை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    No comments