• Breaking News

    அரசு மதுபான கடையில் பூட்டை உடைத்து ரூ.34600 மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு... மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கைவரிசை...

     


    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு மதுபான கடை இந்த கடையில் நேற்று மேற்பார்வையாளராக சுரேந்திரன் மற்றும் விற்பனையாளர்கள் மூன்று பேர் இருந்து வந்தனர்.நேற்று வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை பூட்டு போட்டு விட்டு  மூடி சென்று விட்டனர்.

    சுரேந்திரன் மேற்பார்வையாளர் இன்று காலை கடைக்கு வந்து பார்த்த பொழுது பூட்டு உடைந்து இருப்பதையும் கதவு திறந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த பொழுது கடையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் 34 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனடியாக அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார் என்று விசாரணை செய்தனர்.

    இந்த சம்பவத்தில் மது பாட்டில்களை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் காவல்துறையினர் மோப்ப நாய் மூலம் தங்களை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கடையின் படியில் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர்.

    மது பாட்டில்களை திருடி மிளகாய் பொடி தூவி  சென்ற மர்ம நபர்களை  தாலுகா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    No comments