• Breaking News

    நாகையில் கோமாரி தடுப்பூசி செலுத்திய கால்நடை 12 மணி நேரத்தில் உயிரிழப்பு: இழப்பீடு வழங்க கோரிக்கை


    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில்  கோமாரி நோய் தடுப்பூசி ஆண்டுக்கு இருமுறை செலுத்தப்படுகிறது. அதன்படி  நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா சூரமங்கலம் கிராமத்தில் நேற்று காலை 10 மணி அளவில் கால்நடைகளுக்கு  கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று  கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர். அதன்படி சூரமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த சித்ரா என்பவரின் வீட்டிலுள்ள பசு மாட்டிற்கு நேற்று கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் மாடு சோர்வுடன் காணப்பட்டதோடு உடல் நல குறைவுடன் இருந்துள்ளது. தொடர்ந்து உடல் சோர்ந்த நிலையில் இருந்த கால்நடை,இரவு 10 மணியளவில் உயிரிழந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கால்நடை உரிமையாளர், கோமாரி தடுப்பூசி செலுத்தும்  முன்பாகவே மருத்துவரிடம் மாடு கன்று ஈன்று ஒன்றரை மாதம் ஆகியுள்ளது என்பதை தெரிவித்தேன் மருத்துவர் தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவித்தார் இதனால் மாட்டிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    மாட்டிற்காக வங்கியில் வாங்கி கடனை  எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவிப்பதாக கண்ணீருடன் வேதனை தெரிவிக்கும் அவர் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை அருகே  தடுப்பூசி கோமாரி செலுத்தப்பட்ட கால்நடை 12 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினரிடம், விளக்கம் கேட்ட பொழுது தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மாடு உயிரிழந்த இழந்திருக்காது எனவும், ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாகவும், பிரேத பரிசோதனை செய்த பிறகு ஒரு வாரத்தில் அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவித்த அவர்,மற்ற கால்நடைகள் சில சோர்வாக இருப்பதற்கு அதன் உடல்வாகு காரணம் எனவும் தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை எனவும்,  அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    No comments