இன்றைய ராசிபலன் 20-02-2023
மேஷம் ராசிபலன்
உங்களுக்கான வேலை அதிகமாக இருந்தாலும், செய்ய வேண்டிய செயல்களை அன்றைய தினமே செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய உணர்விலிருந்து இறுதியாக விடுபட வேண்டும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியாளர்களின் விசித்திரமான செயல்கள் உங்களைப் பாதிக்கலாம். ஆனால், தேவைப்பட்டால் மட்டுமே, அவர்களிடம் பேசி உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த கற்றுக் கொள்வதுடன், நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைத்து, முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பது நல்லது. உங்களைச் சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மிதுனம் ராசிபலன்
இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்கள் பணப்பையினை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவாகும். இல்லையென்றால், நீங்கள் தூங்கும் போது, அதன் கனமானது குறைந்துவிடும். செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதின் உள்ளார்ந்த ஆசைகள் காரணமாக பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள். இல்லையென்றால், முன்னெப்போதையும் விட இப்போது வருந்துவீர்கள். உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களை சார்ந்தே இருப்பார்கள். மேலும், நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையற்றவராக உணரக்கூடாது. ஏனென்றால், கடினமான காலங்கள் தான், எப்போதும் சிறந்த நாட்களுக்கு வழிவகுக்கும். இன்று உங்களது எதிர்மறை அணுகுமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல விஷயங்களை மட்டும் நம்புங்கள்.
சிம்மம் ராசிபலன்
கெட்ட நண்பர்கள் உங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து தவறானவிஷயங்களைக்களைந்து விட வேண்டிய நேரம் இது. உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம். குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். சமூகக் கூட்டம் மற்றும் வெளியில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் பயனடையலாம். சரியானதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் வேலையில், உங்களுக்குள்ளவிருப்பங்களைஆய்வு செய்யுங்கள். உங்கள் பணியில் ஒரு வரையறுக்கப்பட்ட பாதையை உருவாக்கவும்.
கன்னி ராசிபலன்
நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது, நீங்கள் ஒரு உன்னத நிலையினை அடைவீர்கள். உங்களது அன்பிற்கினிய நண்பர்களும், நலம் விரும்பிகளும் அவர்களின் பரிந்துரைகளை கொடுத்துள்ளனர். அதிலிருந்து முடிந்தவரை பயனடைவது உண்மையிலேயே உங்களிடத்தில் தான் உள்ளது.
துலாம் ராசிபலன்
அவசர நெருக்கடி என்பது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு சிறிய நெருக்கடியானது உங்களை சிறப்பாக கவனம் செலுத்தவும், மிகவும் தேவையான பொறுப்பினைப் பெறவும் உதவும். உங்களது எண்ணத்தில் எண்ணற்ற வசீகர சிந்தனைகள் உள்ளன. ஆனாலும் என்னவோ, உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் போது, நீங்கள் நிறைய தடுமாறுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் உண்மையிலேயே அதிக சிரத்தை செய்த நேரம் இதுவாகும். நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் மோசமான ஒன்றைச் செய்வதற்கு முன்பாக, உங்களை நீங்களே சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் விமர்சன சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு, வெற்றியை நோக்கி பணியைத் தொடருங்கள்! இதற்காக சில வெகுமதிகள் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் தனிமையில் இருப்பதை உணர்கிறீர்கள், இந்நிலையில், உங்களை உண்மையாக நேசிக்கும் அல்லது கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதை நம்புவது கடினமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உங்களுக்கு நேரம் கிடைக்கலாம், ஏனென்றால் இன்று உங்களுக்குத் தேவையான மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர்கள் உதவக்கூடும்.
தனுசு ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
மகரம் ராசிபலன்
நீங்கள் பொறுமையிழந்து விரைவான முடிவுகளைக் காண விரும்பலாம். உடனடி முடிவுகளைக் காண முடியாவிட்டாலும் கூட, உங்களால் முடிந்த அளவுக்குச் சிறந்ததைக் கொடுக்க முடிவு செய்யுங்கள். இந்த முடிவு இன்று நீங்கள் செய்யும் வேலைகளைத் தானாகவே செய்ய உதவும். உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. முக்கியமற்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இடையில் உங்கள் மனநிலையினை மாற்றிக் கொள்ள அனுமதிக்காதீர்கள். இன்று உங்கள் மனதைப் பகுப்பாய்வு செய்து, மறுபரிசீலனை செய்ய விடாதீர்கள்.
கும்பம் ராசிபலன்
‘அதுவாகவே நடக்கும்’ என்னும் உங்களது எண்ணத்தை மறந்து விடுங்கள்! நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். எனவே, அதற்காக அதிகமாக உழையுங்கள். புதுமையினை புகுத்தும் எண்ணம் தான் உங்களின் உந்து சக்தியாக இருக்கிறது. எனவே, அதில் நிலைத்திருங்கள். சாதாரணமாக வாழ முயற்சிக்க வேண்டாம். ஆனாலும், உங்களது வேலைக்கும், ஆரோக்கியத்திற்கும் இடையில் எல்லையினை வரையறுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நன்றாக சாப்பிடுவதை உங்களது தனிப்பட்ட விதத்தில் செய்து முடிக்கவேண்டிய விஷயமாக மாற்றி, ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். சிந்தியுங்கள். மேலும், ஆலோசனைகளைப் பெற்று, உங்கள் கூச்ச சுபாவத்தை விட்டொழியுங்கள்.
மீனம் ராசிபலன்
நீங்கள் ஏன் சோம்பேறிகளாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வி சில காலமாக உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது. அதை நீங்கள் அகற்ற வேண்டும். இந்த எண்ணத்தால் உங்கள் மனம் பாதித்து இருந்தாலும், அதை உயர்த்துவதற்கான நேரம் இது. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருந்த பயணத்திற்கான நேரம் இது. அந்த அழுத்தங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்புத் திறன்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்!
No comments