இன்றைய ராசிபலன் 04-02-2023
மேஷம் ராசிபலன்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்கொள்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாகச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகமாகச் சிந்திக்க முயலும் போது, சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை விரும்பும் ஒருவர், இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார். இன்று அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்பான மற்றும் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இந்த நாளில், உங்களுக்காக வரிசையாகக் காத்திருக்கும் இன்பமான செயல்களை நிதானமாக அனுபவியுங்கள். மோசமான எண்ணங்களை விட்டுவிட்டு, ஆனந்தத்தைச் சிறந்த முறையில் அனுபவியுங்கள்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் சற்று பின்வாங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்களது புதுமை புகுத்தும் அணுகு முறையினையும் மற்றும் உற்சாகத்தையும் கண்டு, தனிநபர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களது வீடும், குடும்பமும் உங்களை நன்றாக புரிந்து கொள்ளும். மேலும், எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், அவர்கள் உங்களால் பயனடைவார்கள். இன்று, அவர்களை உங்களது நேசத்துக்கு உரியவர்களாகவும், ஏற்றுக்கொள்ளப் பட்டவர்களாகவும் உணர வையுங்கள்.
கடகம் ராசிபலன்
சிறு ஆலோசனைகளைப் பெறுவது எப்போதும் தேவையாகிறது. ஏனெனில், இவை உங்களை ஒருபோதும் வலுவற்றவராக மாற்றப்போவதில்லை. உங்களுக்கு உதவி தேவை என்று மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். இது நீங்களும் அறிவானவர் தான் என்ற ஒரு உணர்வினை சற்றும் குறைக்காது. சிலநேரங்களில், வலுவான மனம் கொண்டவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களிடம் ஆலோசனை சார்ந்த உதவிகளுக்காக வருபவர்களிடம், இது உங்களுக்கு தேவையற்றது என்று கருதி அவர்களை மறுக்கக்கூடாது. நீங்களும் இப்படி கேட்கும் நேரம் இல்லாமலா போய்விடும்? ஆகையால், நீங்கள் அவர்களுக்கு உதவும் போது, அது வேறுவழியில் உங்களுக்கு உதவியாக வந்தடையும். இதனை, முயற்சி செய்ய தவற வேண்டாம்!
சிம்மம் ராசிபலன்
நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக்க வாதி. எனவே, நீங்கள் அந்த திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே, அவற்றைச் சரி செய்து கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நேசிக்க முடிந்தால், அது நல்லது. உங்கள் 'அற்புதமான' யோசனையில் சந்தேகம் வரும் போது, உங்கள் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள். வெறுப்பு உங்கள் கோபத்தை அதிகரித்து விடலாம். ஆனாலும், மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளில் உங்களுக்கு உதவக்கூடிய சில எண்ணங்களைப் பெறக்கூடும்.
கன்னி ராசிபலன்
எல்லா தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய நாளை உங்களது குடும்பத்திற்காக அர்ப்பணியுங்கள். உங்களது குடும்பதிற்காக செலவிடும் நேரத்தின் அளவை குறைக்கக்கூடிய விஷயங்களை, அனுமதிக்கும் மனநிலையில் இல்லாதிருங்கள். வரவிருக்கும் வாரத்தில் உங்களை சரியான பாதையில் நிலைநிறுத்தக்கூடிய விஷயங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க, இன்று சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர்களைப் பாராட்டுங்கள். சிந்தனைமிக்க செய்கைகளால் அவர்களை ஆச்சரியப்படுத்துவது, உங்களது அன்பினை அவர்களுக்குக் காண்பிப்பதற்கான ஒரு நல்வழியாகும்.
துலாம் ராசிபலன்
பல விஷயங்கள் நடத்திருக்கலாம், ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. உண்மையில் உங்களுடன் இணைந்திருந்த நபர், சில காரணத்திற்காக இனி உங்கள் வாழ்க்கையில் இணைந்திருக்கப் போவதில்லை. சமீப காலமாக உங்களைப் பாதித்து வரும் மன அழுத்தம் உங்கள் உடல் நிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவும்.
விருச்சிகம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் சொந்த அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள இதைக் கவனிக்க வேண்டும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். இது முதலில் ஒரு சுமையாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நேசிப்பீர்கள்.
தனுசு ராசிபலன்
நீங்கள் வழக்கமாகவே, புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள், ஆனால், இன்று உங்கள் மனதின் செயல்பாடு தடை கொண்டதாகவும், தெளிவற்றதாகவும் தெரிகிறது. மனக்கிளர்ச்சி நிறைந்த பாதையில் விலகி இருங்கள். இல்லையெனில், இது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, உங்களிடமிருந்து தடம் மாறச் செய்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமூக தொடர்புகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் எந்த நிதி முடிவுகளையும் முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
மகரம் ராசிபலன்
இன்றைய காலகட்டத்தில், நீங்கள் மனம் போனபோக்கில் வாழும் மனப்பாங்கானது, உங்களது கல்வி அல்லது பணி போன்றவற்றை நோக்கி பயணிக்கும் பாதையை குறுகலாக்கிவிடும். எப்போதும், உங்கள் நண்பர்களை நெருக்கமாக வைத்திருங்கள். இன்றைய காலகட்டத்தில், சவால்களை சந்திக்க பயப்பட வேண்டாம். கடலளவு விடாமுயற்சி செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் இலக்கை விரைவில் அடைவீர்கள். ஒருபோதும் உங்கள் நேர்மறை உணர்வினை இழக்காதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் பின்பு, அனைத்தும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் உற்றுநோக்குங்கள்.
கும்பம் ராசிபலன்
இந்த வாரம் உங்கள் தொழிலில் கவனம் செலுத்தக் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். ஆனால் அது வீணாகி விட்டதாகத் தெரிகிறது. இந்த போட்டியில் நீங்கள் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறீர்கள், உங்களது போட்டியாளர் நீங்கள் காட்டும் அதிகப்படியான கவர்ச்சியால் அச்சமடைந்துள்ளனர். உங்கள் ஆற்றலை ஒரு உச்சநிலைக்குக் கொண்டு செல்ல நீங்கள் விரும்பலாம். இனிமையான சக ஊழியர்களைக் காட்டிலும், உங்களுக்குத் தீமை செய்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கலாம்.
மீனம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
No comments