இந்து மத பெண் தியா பிஹெல் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் இன்று கைப்பற்றினர்
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை, தாக்குதல், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 44 வயது இந்து மத பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். சிந்து மாகாணம் ஐதரபாத் நகரம் சங்ஹர் மாவட்டம் சிங்ஹிரோ கிராமத்தை சேர்ந்த பெண் தியா பிஹெல் (வயது 44). கணவரை இழந்த இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி தியா பிஹெல் கிராமத்தில் உள்ள கடுகு வயலில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் நிர்வாண கோலத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் உள்ள தோல் பகுதி உறிக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது அந்தரங்க பாகங்களும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்து மத பெண் உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாயார் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் கடுகு வயல் பகுதிக்கு சென்று பார்த்தபோது நிர்வாண நிலையில் தனது தாயார் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை தியா பிஹெலின் மகன் சோமர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்து மத பெண் தியா பிஹெல் கொலை செய்யப்பட்ட பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். கொலை செய்ய பயன்படுத்திய கதிர் அரிவாளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட பகுதி அருகே இருந்து ஒரு போர்வையையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தியா பிஹெலை கொடூரமாக கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணயை துரிதப்படுத்தியுள்ளனர்.
No comments