• Breaking News

    தாந்தாணி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் பிஜேபி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை  கிழக்கு  மாவட்டம் அறந்தாங்கி வடக்கு ஒன்றியம் தாந்தாணி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் பாஜக சார்பில் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மாவட்ட மகளிர் அணி தலைவி அமுதவல்லி சிதம்பரம் ஏற்பாட்டில்,பாஜக விவசாய அணி துணை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் தாந்தாணி ஊராட்சி அமைப்பாளர் ராம்குமார் மற்றும் அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மகளிர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.அவருடன் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த்,மாவட்ட பொது செயலாளர் முரளிதரன்,பார்த்திபன் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு  பாஜக சார்பில் மேற்கூரை  அமைக்கும் பணிக்கு  அடிக்கல் நாட்டப்பட்டது.அதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.





    No comments