பொன்னமராவதியில் சிபிஎம்,பொதுமக்கள் சார்பில் சார்பதிவாளரிடம் தாவா மனு வழங்கல்..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன-உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏனமேடு மக்கள் பயன்படுத்தும் பொது மயானத்தை தனியாருக்கு பத்திரபதிவு செய்ய கூடாது என சிபிஎம்,பொதுமக்கள் சார்பதிவாளரிடம் தாவா மனு வழங்கினர்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் என.பக்ருதீன் மற்றும் பொன்- உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதி பொதுமக்கள் சார்பில் பொன்னமராவதி சார் பதிவாளர் மாரீஸ்வரி அவர்களிடம் அளிக்கப்பட்ட தாவா மனுவில் தெரிவித்துள்ளதாவது. பொன- உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏனமேடு பகுதியில் சர்வே எண் 378/6 அரசுக்கு சொந்தமான இடத்தை பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக பொது மயானமாக பயன்படுத்தி வருகின்றோம்.இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக இறந்த ஒருவரை அடக்கம் செய்ய செல்லும்போது அந்த இடம் எனக்கு சொந்தமான இடம் என்றும் எனக்கு பட்டா உள்ளது என்றும் கூறி ராமசாமி என்பவர் தகராறு செய்த நிலையில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிணத்தை வைத்து போராட்டம் நடத்திய நிலையில் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் அதே மயானத்தில் அந்த பிணத்தை அடக்கம் செய்தோம். பிறகு சட்ட ரீதியாக நீதிமன்றம் சென்றும் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். அதன் பிறகு ஆர்டிஓ முன்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ராமசாமி என்பவர் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்துவிட்டது என்ற பொய்யான தகவலை கூறிக்கொண்டு பணபலம் மற்றும் அரசியல் பலம் கொண்ட நபர்களிடம் அந்த மயானத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வருகிறது எனவே மேற்படி சர்வே எண் கொண்ட பொது மயானத்தை பத்திரப்பதிவு செய்ய வந்தால் பதிய கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும்,பி. உசிலம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.நல்லதம்பி கே.குமார் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம்.ராமசாமி,ஊர் பொதுமக்கள் சார்பில் வி.தொ.ச நிர்வாகி ஜே.மணிமேகலை,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஆனந்த், ஏ.ஆர். பெரியண்ணன், ஆர்.பொன்னுச்சாமி ஆகியோர் மனுவை வழங்கினர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments